வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்படும் காலப்பகுதி தொடர்பான உறுதியான தினம் அறிவிக்கப்படவில்லை – இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

அரசாங்கத்தினால் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் காலப்பகுதி தொடர்பான உறுதியான தினம் அறிவிக்கப்படவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலர் இருப்பு பற்றாக்குறை மற்றும் கொவிட்-19 வைரஸ் பரவல் நிலைமை உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் எஸ்.கே.கமகே தெரிவித்துள்ளார்.
இதனிடையே வாகன இறக்குமதிக்கான தடையை அடுத்த ஆண்டிலும் தொடர்வதற்கு அரசாங்கம் தீர்மானிப்பதாக செய்தி வெளியாகியுள்ளன.
அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள பாதீட்டினை தயாரிக்கும் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய குறித்த பாதீட்டில் தொடர்ச்சியான செலவீனங்களை கட்டுப்படுத்தும் திட்டங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் வாகன இறக்குமதிக்கான தடை காரணமாக வாகனங்களின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|