வாகனங்களுக்கான எரிபொருள் வாராந்த ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக எரிபொருள் பாஸ் முறைமை அறிமுகம் – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

வாகனச் சாரதிகளுக்கு வாராந்திர எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு வாகனம் ஒரு தேசிய அடையாள அட்டையின்(NIC) கீழ் பதிவு செய்யப்படும் மற்றும் வாகனத்தின் சேஸிஸ் எண் (Chassis number) மற்றும் பிற விபரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும்.
QR குறியீட்டைப் பயன்படுத்தி வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் 2 நாட்கள் எரிபொருள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சல் இந்த பாஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது.
எந்த முறையில் பாஸ் பெறலாம் என்பது குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|