வாகனங்களின் பதிவுகள் அதிகரிப்பு !

Wednesday, August 2nd, 2017

கடந்த ஆண்டு இலங்கையில் மோட்டார் வாகனங்களின் பதிவுகள் 6.3 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

2016ம் ஆண்டு இலங்கையில் உள்ள மொத்த மோட்டார் வாகனங்களின் எணிணிக்கை 6.8 மில்லியனாக அதிகரித்ததுஇது 2015ம் ஆண்டு நிலவிய எண்ணிக்கையில் இருந்து ஏற்பட்ட 6.3 சதவீத அதிகரிப்பாகும்.இலங்கை வர்த்தகர் சம்மேளனத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

எவ்வாறாயினும், வாகன இறக்குமதிக்கான செலவினங்கள் கடந்த ஆண்டு 32 சதவீதத்தால் குறைவடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி 2015ம் ஆண்டு வாகன இறக்குமதியானது 288 பில்லியன் ரூபாவாக நிலவிய அதேநேரம், 2016ம் ஆண்டு அது 194 பில்லியனாக குறைவடைந்திருக்கிறதுஇலங்கை வரலாற்றில் 2015ம் ஆண்டே அதிக வாகன இறக்குமதி செலவினம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: