வவுனியா மக்களுக்கு வைத்திய அதிகாரி எச்சரிக்கை!
Monday, March 13th, 2017கடந்த சில நாட்களாக 22 பேர் பன்றிக்காய்ச்சல் தொற்று நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த நோயாளர்களில் தற்போது 22 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இனங்காணப்பட்டு 16 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு சென்றுள்ளதாகவும் 5 பேர் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலைப்பணிப்பாளர் கூறியுள்ளார்.
அத்துடன், நோய் தொற்று ஏற்பட வாய்புக்கள் அதிகம் உள்ளதால் சிறுவர்களையும், குழந்தைகளையும் தேவையின்றி வைத்தியசாலையில் தங்கியுள்ள உறவினர்களைப் பார்வையிடுவதற்கு அழைத்து வருவதைத் தவிர்க்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கர்ப்பிணித்தாய்மார் மற்றும் சிறுவர்கள் அவதானமாக இருக்குமாறும் வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலைக்கு வரும் குழந்தைகள், சிறுவர்கள் அனைவருக்கும் சுவாசத்தை பாதிக்காதவாறு முககவசம் அணிந்து பாதுகாப்புடன் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றதுடன் வவுனியாவில் அண்மையில் பன்றிக்காய்ச்சல் தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|