வவுனியாவின் இரு விளையாட்டு கழகங்களின் மேம்பாட்டுக்கு ஈ.பி.டி.பியின் வன்னி நடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் முன்மொழிவில் 30 இலட்சம் நிதி ஒதுக்கீடு!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீனின் முன்மொழிவுக்கமைய வவுனியா மாவட்டத்தில் இரண்டு மைதானங்கள் 30 இலட்சம் ரூபா திதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அவற்றின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தின் இளைஞர்களது விளையாட்டு திறனை முன்னேற்றும் நோக்குடனே குறித்த இரு விளையாட்டுக் கழகங்களின் மைதானங்களை நவீனத்துவத்துடன் புனரமைப்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான குலசிங்கம் திலீனின் முன்மொழிவுக்கமையவே அமைச்சர் நாமல் ராஜபக்சவின் நெறிப்படுத்திலில் 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக் கருவான “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் கீழ் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ அவர்களின் ஆலோசனையில் விளையாட்டுதுறை, இளைஞர் விவகார அமைச்சு மற்றும் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் “செம்மையான முன்னேற்றமிக்க இளைஞர்களை உருவாக்குவோம்” என்ற செயற்றிட்டத்தின் அடிப்படையில் கிராமத்துக்கு ஒரு மைதானம் என்ற திட்டம் நாடுமுழுவதும் தற்போது முன்னெடுக்கப் பட்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் வவுனியா வடக்கு முத்துமாரியம்மன் நகர் விளையாட்டுக்கழக மைதான புனரமைப்பிற்காக 15 இலட்சம் ரூபா நிதியும் செட்டிகுளம் கந்தசாமிநகர் விளையாட்டுக்கழக மைதானத்தின் புனரமைப்பிற்காக 15 இலட்சம் ரூபா நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|