வளலாய் வடக்கு மடுமாதா முன்பள்ளிக்கு ஈ.பி.டி.பியின் இலண்டன் கிளை உறுப்பினர் நிதி உதவி!

Tuesday, October 18th, 2016

வளலாய் வடக்கு மடுமாதா முன்பள்ளியின் கட்டடப் புனரமைப்பிற்காக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் இலண்டன் கிளை உறுப்பினரான இராஜதுரை இராஜமோகன் (மோகன்) நிதி உதவி வழங்கியுள்ளார்.

நிரந்தரக் காணியோ கட்டடமோ இல்லாத நிலையில் சாதாரண ஒரு மரநிழலின் கீழ் இம் முன்பள்ளி இயங்கிக்கொண்டிருந்த நிலையில் குறித்த மடுமாதா முன்பள்ளியினை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாகச் செயலாளா் இராமநாதன் ஐங்கரன் கடந்த 2016.09.06 ஆம் திகதி நேரில் சென்று பார்வையிட்டதுடன் முன்பள்ளியின் நிலைமை தொடா்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளா் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்குக் கொண்டுசென்றிருந்தார்.

unnamed

குறித்த முன்பள்ளியின் நிலைமைகளை அறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியினால் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் புலம்பெயர் தேச உறுப்பினா்களின் நிதிப் பங்களிப்புடன் இம்மடுமாதா முன்பள்ளிக்கு தற்காலிகக்கட்டடம் ஒன்று அமைப்பதற்கான நிதி உதவி வழங்கிவைக்கப்பட்டது.

இதனிடையே வளலாய் வடக்கு வேளாங்கண்ணி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கும். மடுமாதா முன்பள்ளிக்கும் நிரந்தரக்கட்டடம் அமைப்பதற்காக காணிக் கொள்வனவு தொடர்பான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

unnamed (1)

இதன்போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாகச் செயலாளா் இராமநாதன் ஐங்கரன், கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளா் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் , கட்சியின் வல்வெட்டித்துறை நிர்வாகச் செயலாளா் திருமதி.கைலாயினி இந்திரன், கட்சியின் பருத்தித்துறை நிர்வாகச் செயலாளா் பிரான்சிஸ் இரட்ணகுமார், கட்சியின் இலண்டன் கிளை உறுப்பினா் இராஜதுரை இராஜமோகன், கட்சியின் பருத்தித்துறை நிர்வாகசபை உறுப்பினா் விசிந்தன் கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாகசபை உறுப்பினா் ஆறுமுகசிவம் அரவிந்தன் ஆகியோர்கலந்துகொண்டனர்.

unnamed (2)

Related posts: