வல்வெட்டித்துறையில் நடந்த இந்திர விழா: ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரள்வு!

Monday, April 30th, 2018

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இந்திர விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

குறித்த நிகழ்வையொட்டி ஊரிக்காடு தொடக்கம் ஊறணி வரையான மூன்றரை கிலோ மீற்றர் வீதி முழுவதும் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

101 அடியில் புகைக்கூண்டு, 47 அடியில் மின்னொளி கட்டவுட், கடலுக்குள் இசைக் கச்சேரி, வீதிக்கு மேல் பரண் அமைத்து இசைக்கச்சேரி என்று இந்திரவிழா, பிரமாண்டங்களால் மக்களை திக்குமுக்காட வைத்து விட்டது.

இந்திரவிழாவில் நேற்றைய தினம் 9 இடங்களில் இசைக் கச்சேரிகள் நடைபெற்றன. சிறப்பாக, கடலுக்குள் மேடை அமைத்து இசை நிகழ்வு நடைபெற்றது. வேம்படியில், வீதிக்கு மேலாக பரண் அமைத்து இசை நிகழ்வு இடம்பெற்றது.

IMG-b3e58901c485170f951c8a3b44aec6eb-V

Related posts:

பொன்னாலைச் சந்தியில் கட்டி முடிக்காத வீடு ஒன்றைப் பறித்தது பிரதேச செயலகம் -மேலும் பல வீடுகளைப் பறிக்...
யாழ் மாநகர சபையின் இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்யும் கூட்டம் நிறைவெண் இல்லாத காரணத்தினால் ஒத்திவைப...
செயலிழந்துள்ள இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தை நாளைமறுதினம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடிய...