வலி வடக்கு பொது அமைப்புகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
Monday, January 2nd, 2017வலிகாமம் வடக்கு பிரதேசத்திற்கட்பட்ட பொது அமைப்புகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் தளபாடங்கள் மற்றம் கணனி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலி பிரதேச நிர்வாகத்தினரிடம் குறித்த பகுதி சில பொது அமைப்புகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் மூலம் அளவெட்டி அறிவொளி சனசமூக நிலையம் மற்றும் கட்டுவன் மேற்கு வள்ளுவர் சனசமூக நிலையம் ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இன்றையதினம் வலி.வடக்கு பிரதேச சபை அலுவலகத்தில் பிரதேச சபை செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்(ஜீவன்) மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்) ஆகியோரால் குறித்த சனசமூக நிலைய நிர்வாகத்தினரிடம் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கட்சியின் வலி வடக்கு பிரதேச உதவி நிர்வாக செயலாளர் பவான் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|