வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் மக்கள் பங்கேற்பு அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பு நிகழ்ச்சி!

Thursday, May 9th, 2019

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பில் மக்கள் பங்கேற்பு அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பு நிகழ்ச்சி நேற்றையதினம் நடைபெற்றது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் தவிசாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குறித்த பிரதேசத்தின் கட்டுமாணங்கள் மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு திட்டங்களை முன்னெடுக்கும்போது முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டியே திட்டங்கள் தொடர்பிலான தெரிவுகள் வகைப்படுத்தப்பட்டன.

இதன்போது பிரதேச சபை அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச வட்டாரக் குழுக்களின் பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: