வலிகாமம் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு – யாழ் மாவட்டத்தில் ஒரே நாளில் 143 பேருக்கு தொற்றுறுதி!

Thursday, June 10th, 2021

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்டத்தில் 108 பேர் உட்பட வடக்கில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளிலேயே 143 பேருக்கு தொற்று உறுதியானது,

இதன்படி யாழ்.மாவட்டத்தில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 தொற்றாளர்களும், யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 தொற்றாளர்களும், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 தொற்றாளர்களுமாக 3 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் நேற்றயதினம் 108 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் வவுனியா மாவட்டத்தில் 28 தொற்றாளர்களும், முல்லைத்தீவில் 6 தொற்றாளர்களும், கிளிநொச்சியில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: