வறுமைக்கோட்டிற்கு உட்பட்டோரிற்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச!

Friday, November 22nd, 2019

குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு அரச துறை வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க அமைச்சர்கள் கவனம் செலுத்தவேண்டும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களுக்கு தலைவர்களை நியமிப்பதனை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts: