வறுமைகோட்டின் கீழ் வாழும் 1.38 மில்லியன் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் சமூர்த்திகொடுப்பனவு மேலும் 1 50 000 குடும்பங்களுக்கு வழங்கதீர்மானம்!

Thursday, June 14th, 2018

நாடுமுழுவதும் வறுமை கோட்டின்கீழ் உள்ள மக்களுக்கு அரசாங்கம் சமுர்த்திகொடுப்பனவு வழங்கிவருகிறது. அதனடிப்படையில் இதுவரை 1.38 மில்லியன் குடும்பங்களைச் சேர்ந்தோர்ச முர்த்திநிவாரண உதவிகளை பெற்றுவருகின்றனர். தற்போது நாடுமுழுவதும் மேலும் 150000 குடும்பங்கள் வறுமைகோட்டின் வாழ்கின்றார்கள் என்பதால் இக்குடும்பங்களுக்கும் சமுர்த்திபெற்றுக் கொள்வதற்கான வழி வகைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் நடைபெற்ற வரட்சிநிவாரணம் வழங்கும் நிகழ்வொன்றில் சமுர்த்தி குறித்து அமைச்சர் ஹரின் உரையாற்றுகையில் இவ்வருடம் ஆகஸ்ட் மாதமளவில் இரண்டு இலட்சம் பேருக்கும் டிசம்பர்மாதமளவில் இரண்டு இலட்சம் பேருக்கும் எதிர்வரும் 2019 ஏப்ரல் மாதத்திற்குள் ஒரு இலட்சம் பேருக்கும் புதிதாகசமுர்த்தி நிவாரணம் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வறுமையொழிப்புத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இச் சமுர்த்திகொடுப்பனவு திட்டத்திற்காக புதிதாக குடும்பங்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் மேன்முறையீடுகள் கோரப்பட்டுள்ளதுடன் இதற்கான விண்ணப்ப படிவங்களை பிரதேசசெயலாளர் ஊடாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்ட சமுர்த்தி அபிவிருத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜே. தடல்லகேச முர்த்திவேலைத்திட்டம் என்பது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை தேசிய அபிவிருத்திதுறைக்கு பங்களிப்பு செய்துகொள்வதற்கான வேலைத்திட்டம் என்பதுடன் இதற்கு முழுமையான பங்களிப்பு செய்வதற்கு தகுதியான குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேன்முறையீடுகள் அனுப்புவதற்கான நடைமுறைகள் தொடர்பாக தற்போது சமுர்த்தி உதவிபெறாத குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் குடும்பத் தலைவர் பெயர் விலாசம் அடையாளஅட்டை இலக்கம் தொலைபேசி இலக்கம் வயது குடும்ப அங்கத்தவர்களின் பெயர் வயது குடும்பத்தின் தற்போதைய வருமானம் கிடைப்பதற்கான பிரதானவழிகள் அத்துடன் வேறு இதனோடுதொடர்புடைய மேலதிகவிபரங்கள் என்பன விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்படவேண்டும்.

சமுர்த்தி உதவிபெறுவதற்காக இதுவரை விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பித்துள்ளவர்களும் இப்பு தியதிட்டத்தினூடாக விண்ணப்பப்படிவத்தை மீண்டும் சமர்ப்பிக்கமுடியும்.

சமுர்த்தி உதவிபெறுவதற்கான விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்கப்படும்போது சமுர்த்திநிவாரணம் பெறுவதற்கான தகுதியுடையவரா என்பதை அப்பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர் கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்டு பிரதேசசெயலாளர் ஊடாக அனுப்பிவைக்கப்படல்; வேண்டும். விண்ணப்பப்படிவங்களை பரிசீலித்தல் பரிந்துரை செய்தல் என்பனசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் உட்படவலைய மட்டத்தில் கிராமகுழுக்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்பதோடு முன்னுரிமை அடிப்படையில் அடையாளம் காண்பதற்கு அந்தந்த பிரதேச செயலாளர் ஊடாக மேற்கொள்ளப்படும். பிந்திக் கிடைக்கும் அல்லது உறுதிப்படுத்தப்பட்டத கவல்கள் அடிப்படையில் முன்னுரிமைபட்டியல் மாற்றமடையலாம்.

2018 ஆம் ஆண்டு ஜூலைமாதம் 31 ஆம் திகதிகிடைக்கும் விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர் மட்டத்தில் முதலாவதுசுற்றில் முன்னுரிமை பட்டியலில் உட்படுத்தப்பட்டு சமுர்த்தி உதவிபெறும் நபராக தெரிவு செய்யப்படுவார் என சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜே. தடல்லகேமேலும் குறிபிட்டுள்ளார்.

Related posts: