வறிய குடும்பத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு!

Friday, November 11th, 2016

கோப்பாய் – ஊரெழு பகுதியில் வாழும் வறிய குடும்பம் ஒன்றிற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாகத்தினரால் கூரைத்தகடுகள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கணவரை இழந்த நிலையில் வறுமையில் வசித்துவந்த சிவலிங்கம் தேவி என்பவருக்கே குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

14993560_1869962376556685_8377111546110322842_n

குடிசைவீட்டில் மழை காரணமாக பலஅசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த இந்த குடும்பத்திற்கு குறித்த பகுதியின் வட்டார செயலாளா் நிமலின் பரிந்துரைக்கு அமைய நிலைமைகளை நேரில் சென்று ஆராய்ந்தறிந்தகொண்ட கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் குறித்த குடும்பத்திற்கு உடனடித்தேவையாக காணப்பட்ட கூரைத்தகடுகளை உடனடியாக பெற்றுக்கொடுத்து பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார்.

15032771_1869962979889958_8283747791287461585_n

குறித்த நிகழ்வின்போது கோப்பாய் மத்தி பகுதிக்கான வட்டார உப-செயலாளா் கந்தசாமி சிவயோகன், ஊரெழு பகுதிக்கான வட்டார செயலாளா் எஸ்.நிமல், புத்தூா் மேற்கு பகுதிக்கான வட்டார செயலாளா் ஆறுமுகசிவம் அரவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டு கூரைத்தகடுகளை வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: