வறட்சி காரணமாக பத்து இலட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு

Tuesday, July 25th, 2017

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக திருகோணமலை , மட்டக்களப்பு , அம்பாறை , கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு , யாழ்ப்பாணம் , மன்னார் , இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சி நிலையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு , வடமத்திய , வடமேற்கு, வடக்கு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.குருநாகல் , திருகோணமலை, புத்தளம், முல்லைத்தீவு , யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் வறட்சியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: