வறட்சியான காலநிலை – நாடளாவிய ரீதியாக 35,653 விவசாயிகள் பாதிப்பு – அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கு வழங்கிய அறிக்கையில் தெரிவிப்பு!

Friday, August 18th, 2023

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியாக 35,653 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனனர்.

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கு வழங்கிய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வறட்சியால் 38, 903 ஹெக்டயர் நெற் செய்கை அழிவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: