வருமானம் குறைந்த மாணவர்களின் விசேட ஆற்றல்களை ஊக்கவிக்க நடவடிக்கை! 

Sunday, July 31st, 2016

 

கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள மாணவர்களின் கல்வி மற்றும் விசேட ஆற்றல்களை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள புதிய தொடர்மாடிக் கட்டிடங்களில் வசிக்கும் குடும்பங்களிலுள்ள மாணவர்கள் தொடர்பில் இதன் முதற்கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தொடர்மாடிக் குடியிருப்புகளில் 10,000 இற்கும் அதிகமான மாணவர்கள் காணப்படுவதாக இந்த செயற்றிட்டத்தின் ஆலோசகர் சுனிமல் ஜனரஞ்சன குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.இந்த மாணவர்களை இலக்கு வைத்து பல செயற்றிட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுனிமல் ஜனரஞ்சன தெரிவித்துள்ளார்

Related posts: