வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபா – அடுத்தவாரம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவிப்பு!

Saturday, April 10th, 2021

நாட்டிலுள்ள குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் மற்றும் சமூர்த்தி பயனாளிகளுக்கு புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தள்ள இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இந்த கொடுப்பனவுகள் அடுத்த வாரமளவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

குடும்பப் பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டுள்ள குடம்பங்களின் தேவைகருதி வழங்கப்படும் இந்த கொடுப்பனவை வழங்கும்போது கொரோனா தொற்றினால் இன்னல்களை சந்தித்துள்ள குடும்பங்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் வறுமை ஒழிப்பக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான பணிக்குழு புத்தாண்டு விடுமுறைக்கு முன்னர் 5,000 ரூபாயை வழங்கும் நடவடிக்கைகளை உறுதி செய்யும் என்றும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: