வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55,012 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தகவல்!

Saturday, September 17th, 2022

கடந்த வருடத்தை விட இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் 36ஆவது வாரத்தில் இலங்கையில் 55,012 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு நிலவரப்படி இந்த எண்ணிக்கை 18,265 ஆக உள்ளது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.!

Related posts: