வரலாற்றில் ஏற்படாத நிலை தற்போது இலங்கையில்!

Thursday, January 19th, 2017

நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நீர் மின் உற்பத்தி 11 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அதுல வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின், மின்சார உற்பத்தி வரலாற்றில் இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  நிலவும் வறட்சியான காலநிலையே இதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், வறட்சியான காலநிலையால் ஏற்படும் தாக்கத்தால் மின்சாரத் தடை ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

electricity-board-1-450x285

Related posts: