வரலாறுகளை மறைக்காது அனைவரையும் நினைவுகூரும் வகையில் பொதுவான நினைவாலயம் அமைக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி வலியுறுத்து!

வரலாறுகளை மறைக்காது அனைவரையும் நினைவுகூரும் வகையில் பொதுவான நினைவாலயம் அமைக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனனாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளாது.
யாழ் மாநகரின் புதிய முதல்வர் மணிவண்ணன் தலைமையில் இன்று காலை 10.15 மணியளவில் ஆரம்பமானது.
இந்நிலையை யாழ் பல்களைக்களக தூபி உடைப்பு விவகாரத்தை கண்டித்து பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.
இதன்போது சபையில் அங்கத்துவம் செய்யும் கட்சிகள் தத்தமது கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே கட்சியின் யாழ் மாநகரின் முன்நாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் – குறித்த சம்பவம் ஒரு துயரம் மிக்கதாக அமைந்துள்ளது.
அந்தவகையில் இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் ஆரம்பிகப்பட்ட காலத்திலிருந்து உரிமைக்காக போராடிய அனைத்து இயக்கங்கள் மற்றும் பொதுமக்களை நினைவுகூரும் வகையில் பொது நினையாலயம் அமைக்கப்பட வேண்டும். இதுவே எமது கட்சியினதும் பொதுவான் ஆனைத்து மக்களினதும் நிலைப்பாடு.
அந்தவகையில் யாழ் பல்கலைக்களக மாணவன் விஜிதரன் படுகொலை மற்றும் அவருக்கு நீீதி கேட்டு போராடிய விமலேந்திரன் உள்ளிட்ட மாணவர்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் உரிமைப்போராட்டத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளையும் நினைவுகூரும் வகையில் பொதுவக அமைக்கப்பட வேண்டும் என்றும் சபையில் ஏற்றுக்கொளளப்படது. அத்துடன் கல்விக்கூடத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் உள்னுளைந்தமை மற்றும் தூபி உடைக்கப்பட்டமையை கண்டிப்பது உள்ளிட்ட மூன்று முன்மொழிவுகல் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|