வரட்சியான காலநிலையால் பாடசாலை மாணவர்கள் பாதிப்பு!

Saturday, May 13th, 2017

கிழக்கில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக குழந்தைகள், சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், பாடசாலைகளுக்குச் சென்றுவரும் மாணவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாகவும் சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்

ஏப்ரல் மாதம் தொடங்கிய கடுமையான உஷ்ணம் தொடர்ந்தும் நீடிப்பதாகவும், இந்நிலை அடுத்துவரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடரும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக முன்பள்ளிகள் பெரும்பாலும் தகரத்தால் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இடநெருக்கடி மிகுந்த நிலையில் சிறார்கள் கற்கும் நிலையில் முன்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் நாளாந்தம் கடும் உ~;ணத்திற்கு இலக்காகி மயக்கமுற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேநிலைமை கிழக்கின் பல பாடசாலைகளிலும் நிலவுவதாகவும், இதனைக் கருத்தில் கொண்டு பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித் திணைக்கள அனைத்துத் தரப்பினரும் மாணவர்களுக்கு உரியமுறையில் விழிப்புணர்வுகளையும், தெளிவூட்டல்களையும் வழங்க வேண்டும்.

அத்துடன் நாளாந்தம் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் பெற்றோர்களும் இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்தவேண்டியது அவசியமானதென்றும் சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: