வட மாகாணத்தை அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் – யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு!

Sunday, March 20th, 2022

வடக்கு மக்களைப் பாதுகாத்து அந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், நயினா தீவு ரஜமஹா விகாரையில் இன்று இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். அங்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யாத்திரிகர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளை விரிவுப்படுத்தி நயினாதீவு ஆலயத்தை மேலும் அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பின்னர் நயினாதீவு நாகப்பூசணி அம்மன் ஆலயத்தில் பிரதமர் வழிபாடுகளில் ஈடுபட்டதாக அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: