வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முக்கியஸ்தர்கள் நேரில் சென்று வாழ்த்து!

வடக்கு மாகாண புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள சுரேஷ் ராகவன் அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள சுரேஷ் ராகவன் இன்று யாழ். பழைய பூங்கா வளாகத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
வடமாகாண ஆளுநராக கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே அண்மையில் ஜனாதிபதியினால் பதவி விலக்கப்பட்ட நிலையில், புதிய ஆளுநராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்த புதிய ஆளுநர் சுரேன் ராகவன் காலை 10 மணிக்கு தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இந்நிகழ்வினை தொடர்ந்து புதிய ஆளுநரை வரவேற்கும் நிகழ்வு ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகர் தவராசா, கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் காவேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஷ்வரன் மற்றும் யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்டோர் கலந்து புதிய ஆளுநருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் ஆராய்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள் அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு புதிய ஆளுநருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|