வட்டிவீதத்தை அதிகரித்தது மத்திய வங்கி!

Friday, March 4th, 2022

இலங்கை மத்திய வங்கி நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நடவடிக்கைகளில் தொடரும் தடைகளை கவனத்தில் கொண்டு நேற்று நடைபெற்ற மத்திய வங்கியின் நாணய சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, நிலையான வைப்புத்தொகை வசதி 6.5 சதவீதமாகவும், நிலையான கடன் வசதி 7.5 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: