வடமாகாண கல்வி அமைச்சின் வினைத்திறனின்மையால் ஒரு பாடசாலையில் இரண்டு அதிபர்கள் –  ஈ.பி.டி.பி.யின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் சுட்டிக்காட்டு!

Thursday, August 25th, 2016

தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த வடக்கு மாகாண கல்வியமைச்சருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையே நடக்கும் முரண்பாடுகளால் ஒரு பாடசாலையில் இரண்டு அதிபர்கள் பணியாற்றவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு வடமாகாணத்தின் கல்விச்சேவை நிர்வாகம் சென்றுள்ளது. இந்நிலையை பார்த்து வெட்கப்படவேண்டியுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளருமான வைத்தியநாதன் தவநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வடக்கு மாகாண சபையின் 60 அமர்வு நடைபெற்றபோது குறித்த விடயத்தை சுட்டிக்காட்டி உரையாற்றிய தவநாதன் மேலும் தெரிவிக்கையில் –

கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் தற்போது இரு அதிபர்கள் இருக்கிறனர். இவர்களில் ஒருவர் அலுவலகத்திலும் மற்றொருவர் மரத்திற்குகீளும் இருக்கின்றனர். இது வடக்கு மாகாண கல்வியமைச்சின் ஒழுங்கற்றதும் வினைத்திறனற்றதுமான செயலாகும். தமது தனிப்பட்ட பகைமைகளுக்காக கல்விக்குள் அரசியலை நடத்துவது எமது பகுதி கல்விநிலையை நாமே அழிப்பதற்கு ஒப்பானது. இத்தகைய செயற்றிறனற்ற செயற்பாடகளை உடனடியாக நிவர்த்தி செய்யவெண்டம் எனவும் தவநாதன் தெரிவித்துள்ளார்.

தவநாதனின் குற்றச்சாட்டுக்கு கருத்து தெரிவித்த வடக்கு மாகாண சபை தமிழ் தேசியக் கூட்டமைப்ப உறுப்பினர் அரியரத்தினம் பசுபதி- சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இரண்டு அதிபர்கள் அல்ல மூன்று அதிபர்கள் இருக்கிறார்கள். இது வடக்கின் கல்வி அமைச்சின் நிர்வாகக் குறைபாடுகளுள் ஒன்று எனச சுட்டிக்காட்டினார். மேலும் நான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்துகொண்டு இவ்வாறு கூறுவது வருத்தமளிக்கின்றது எனவும் குறித்த பிரச்சினையை வடக்கு மாகாண கல்வியமைச்சர் திருத்திக் கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts: