வடமாகாணத்தில் 22 ஆயிரம் பொருத்து  வீடுகள்!

Tuesday, November 22nd, 2016

வடமாகாணத்தில் 22 ஆயிரம் பொருத்து  வீடுகள் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகச்  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார  அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டிற்கு நேற்றுத் திங்கட்கிழமை(21) வருகை தந்த அமைச்சரிடம் கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்திலிருந்து 97 ஆயிரம் பொதுமக்கள் பொருத்து வீடுகளுக்கான கோரிக்கையை முன்வைத்துக் கடிதம் மூலம் தனக்கு தன்னிடம் கேட்டுக் கொண்டதற்கமைவாகவே  22ஆயிரம் வீடுகளை அமைப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைவாக வீடொன்றுக்கான செலவீனம் 16 இலட்சம் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

house-2

Related posts: