வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு அனுஸ்டிப்பு!

Sunday, October 31st, 2021

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு  யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தமிழ் மக்களுக்கான தார்மீகக் கடமை எனும் தொனிப்பொருளில் இம்முறை நினைவு கூரப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்து கொண்டள்ளனர்

குறித்த நிகழ்வின் போது முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுத்ததற்காக ஆணைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு  90 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து அனுப்பப்பட்ட முஸ்லிம்களை இழந்த சொத்துக்களை மீள  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது

000

Related posts: