வடக்கு மாகாணத்தில் முதலிடத்தை பெற்ற ஜனுஸ்காவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பாராட்டு!

Tuesday, November 17th, 2020

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் முதல் இடத்தினையும், தேசிய மட்டத்தில் இரண்டாவது இடத்தினையும் பெற்ற யாழ் – தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவி செல்வி.சுபாஸ்கரன் ஜனுஸ்கா அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் வெளியான குறித்த முடிவுகளின் அடிப்படையில் செல்வி.சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளை பெற்றிருந்தார். இதனடிப்படையில் அவர் இலங்கையில் இரண்டாவது இடத்தையும் யாழ் மாவட்டத்தில் முதலாவது இடத்தையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில் குறித்த மாணவியை ஊக்குவிக்’கும் வகையில் இன்றையதினம் அவரது இல்லத்திற்கு கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் கட்சியின் வலிகாமம் தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் ஆகியோர்  சென்று மாணவியை வாழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: