வடக்கு – கிழக்கில் 3 இலட்சத்து 5418 பேர் கொரோனாத் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்!

Monday, July 19th, 2021

வடக்கு கிழக்கு மாகாணங்களில் நேற்றுவரை தடுப்பூசி போட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் 3 இலட்சத்து 5 ஆயிரத்து 418 பொதுமக்கள் முதல் கட்டத்துக்கான தடுப்பூசியையேனும் பெற்றுள்ளார்கள்.

அதேவேளை வடக்கு கிழக்கில் 130,186 பொதுமக்கள் இரண்டு கட்டத்துக்கான டோஸையும் பெற்றுள்ளனரென தரவுகள் தெரிவிக்கின்றன.

முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்ற நிலையில், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் ஒரு இலட்சத்து 84 ஆயிரத்து 161 மக்கள் அவர்களின் முதல் கட்டத்துக்கான தடுப்பூசியை பெற்றுள்ளார்கள்.

இதில் 57 ஆயிரத்து ,375 வடக்கு மாகாண மக்கள் இரண்டு கட்டத்துக்கான டோஸையும் பெற்றுள்ளனர்.

அதே போல கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில், ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 257 மக்கள்அவர்களின் முதல் கட்டத்துக்கான தடுப்பூசியை பெற்றுள்ளார்கள்.

இதில் 72 ஆயிரத்து 811 கிழக்கு மாகாண மக்கள் இரண்டு கட்டத்துக்கான டோஸையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: