வடக்கு, கிழக்கில் வன்முறைகளுக்கு எதிராக சுற்றிவளைப்புகள்!

Tuesday, May 15th, 2018

வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகரகுறிப்பிட்டார்.

ஆவா குழுவினால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் வன்முறைகள் தொடர்பில், அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு,பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் அனைவரும் விசேட சுற்றிவளைப்பின் மூலம் கைது செய்யப்பட்டவர்கள் எனவும், தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விசேட சுற்றிவளைப்புகள்மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related posts: