வடக்கு கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிப்பு!

Thursday, December 8th, 2016

வடக்கு கடற்பரப்புகளில் 50 கிலோ மீற்றர் அளவில் காற்று வீசிக்கொண்டிருப்பதால் காகேசன்துறை, பருத்தித்துறை, செம்பியன்பற்று, மற்றும் முல்லைத்தீவு பகுதி கடற்தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக முல்லைத்தீவு மற்றும் செம்பியன்பற்று கடற்கரை பிரதேசங்களில் ஆட்களின் நடமாட்டம் மிகக் குறைவடைந்து காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது.

மேலும், இந்த நிலையில் தற்பொழுது காற்றின் வேகம் 50 கிலோமீற்றருக்கு அதிகமாக காணப்படுகின்றதுடன் காற்றின் வேகம் 60 கீலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாதாரண காற்று

Related posts: