வடக்கும் இணைந்தால் ஜனவரியில் தேர்தல்- மகிந்த தேசப்பிரிய

எல்லைநிர்ணயப் பணிகள் உள்ளிட்ட ஆரம்ப பணிகள் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரமளவில் நிறைவு செய்யப்படுமாயின், அடுத்த ஜனவரி மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சபாநாயகர் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், இந்த மாதத்திற்குள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வரைபடத்தின் பணிகள் நிறைவுசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பணிகள் நிறைவு செய்யப்படும் பட்சத்தில் டிசம்பர் மாதத்தில் தேர்தலை நடத்த முடியும் எனவும், வடக்கு மாகாணத்தையும் இணைத்து ஆறு மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தப்படுமாயின், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தேர்தலை நடத்த முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பாடசாலை நேர மாற்றத்தால் ஆசிரியர்களுக்கு பாதிப்பே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுட்டிக்...
காற்றின் வேகம் 30-40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் – வானிலை அவதான நிலையம்!
கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர் தர்சானந்தனுக்கு சாட்டையடி கொடுத்த ஈ.பிடி.யின் உறுப்பினர் சட்ட...
|
|