வடக்கில் ஹர்த்தால்: இயல்பு நிலை பாதிப்பு!
Friday, June 16th, 2017வட மாகாண முதலமைச்சர் ஊழலிலீடுபட்ட அமைச்சர்கள் தொடர்பாக எடுத்த முடிவினால் ஏழுந்துள்ள சர்ச்சை காரணமாக இன்றையதினம் வடக்க மாகாணத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
ஆளுனரிடம் முதலமைச்சருக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நகர்ப்பற வர்த்தக நிலையங்கள மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து சேவைகளும் தடைப்பட்டுள்ளன. வடக்கின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
மேலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமையால் தூர இடங்களிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்ல போருந்துகளுக்கு காத்திருந்த நோயாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.
அத்துடன் குறித்த கடையடைப்பால் தனியார் மருந்தகங்களும் மூடப்பட்டிருந்தமையால் நோயாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்
இதனிடையே சில இடங்களில் ரயர்கள் கொழுத்தப்பட்டு மக்களுகது இயல்பு வாழ்க்கை அசௌகரியங்களுக்குட்பட்டிருந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
Related posts:
|
|