வடக்கில் பொருத்து வீடுகள் அமைக்கும் பணி டிசம்பருக்குள் ஆரம்பம் – அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்!
Saturday, September 16th, 2017வடக்கு மாகாணத்தில் பொருத்து வீடு வேண்டும் என ஆயிரக் கணக்கான குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன. அவர்களுக்கான வீடுகளை அமைக்கும் பணிகள் இந்த வருடத்துக்குள் ஆரம்பிக்கப்படும். அதற்கு எந்தத் தடைகள் வந்தாலும் எதிர் கொள்வதற்குத் தயார் இவ்வாறு மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது
வடக்குமாகாணத்தில் பொருத்து வீடு வழங்குமாறு கோரி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன. அந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் அவர்களுக்கான வீடுகளை அமைக்கும் பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பொருத்து வீட்டுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தது. எனினும் அந்தக் கட்சி அதனை மீளப் பெற்றுவிட்டது. எனினும் மீண்டும் இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதாகக் கூறப்படுகின்றது. எது எவ்வாறாயினும் பொருத்து வீட்டுத்திட்டம் இந்த வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டு கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படும். இந்தத் திட்டம் எனது தனி ஒருவனின் திட்டம் அல்ல. இது மீள் குடியேற்ற அமைச்சின் திட்டத்தில் ஒன்றாகும்.
இதற்கு அமைச்சரவை அனுமதி தந்துள்ளது. எனவே எந்தத் தடைகள் வந்தாலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
Related posts:
|
|