வடக்கில் கடமைகளைப் பொறுப்பேற்காத பட்டதாரிகளின் விபரங்கள் கோரல்!

Saturday, February 16th, 2019

வட மாகாண கல்வி அமைச்சினால் 249 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்ட நிலையில், இதுவரை தமது கடமைகளைப் பொறுப்பேற்காதவர்களின் விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் 2019-01-26 அன்று வேம்படி மகளிர் கல்லூரியில் வைத்து வழங்கப்பட்ட நியமனத்தின் போது 249 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. இவர்களில் 160 பேர் மட்டுமே கடமையில் இணைந்துள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் தற்போது நியமனம் வழங்கியும் கடமைகளைப் பொறுப்பேற்காத பட்டதாரிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

Related posts: