வடக்கில் இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்!
Thursday, March 11th, 2021வடமாகாணத்தில் இளைஞர் யுவதிகளை இலங்கைப் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளன
இது தொடர்பில் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த செய்திக் குறிப்பில் –
2021.02.12 ஆம் திகதிய அரச வர்த்தகமானிப் பத்திரிகை இல 2215/ 2021 இல் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கேற்ப வடமாகாணத்தில் வசிக்கும் தகைமை உடைய இளைஞர் யுவதிகளை இலங்கைப் பொலிஸ் சேவையில் ஆட்சேர்த்துக் கொள்ளும் நோக்கத்திற்காக ஆண், பெண் பொலிஸ் கொஸ்தபால் மற்றும் சாரதி போன்ற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த பதிவிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 2021.03.31 என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன் குறித்த விண்ணப்பப் படிவத்தை பொலிஸ் நிலையங்களில் பெற்றுக்கொள்ள மடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்கான நேர்முகப்பரீட்சையும் வடமாகாணத்திலேயே இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ள சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன வடமாகாணத்தில் தகைமையும் திறமையும் உடைய பெருமளவான இளைஞர் யுவதிகளை அரசாங்க நிரந்தர தொழில் வாய்ப்பான இலங்கைப் பொலிஸ் சேவைக்கு இணைத்துக் கொள்ளும் இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|