வடக்கிற்கு வருகின்றார் சுகாதார அமைச்சர்!

மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின எதிர்வரும் மார்ச் மாதம் 2ம், 3ம் திகதிகளில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் வடக்கின் நிலைமையை பார்வையிடுவதோடு பல்வேறு சுகாதார நலசெயற்திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வடக்கின் சுகாதாரத்துறை அபிவிருத்தி தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளோடு கலந்துரையாடவுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழில் காணிகளை கண்காணித்த அமெரிக்க பிரதிநிதிகள்!
வன்னி மாவட்ட விவசாய அபிவிருத்திக்காக மூவாயிரத்து முன்நூறு மில்லியன் ஒதுக்கீடு- விவசாய அமைச்சர் மஹிந்...
நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம்!
|
|