வடக்கின் பிரதம செயலாளராக எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம்!

Wednesday, July 21st, 2021

வவுனியா மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன வடக்கு மாகாண பிரதம செயலாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் பதவிக்கு இலங்கை நிர்வாக சேவையில் மூத்த அதிகாரிகளில் ஒருவரை நியமிக்க ஆராயப்பட்டது.

இந்த நிலையில் வவுனியா மாவட்ட செயலர் எஸ்.எம். சமன் பந்துலசேனவை வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்துக்கு முதன்முறையாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பிரதம செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: