வடக்கின் கல்வித்துறையில் குறைகேள் விசாரணைக் குழு!

Monday, February 11th, 2019

வட மாகாணத்தின் கல்வித்துறையில் குறைகேள் விசாரணைக் குழுவொன்றினை அமைப்பதற்கு ஆளுநர் சுரேன் ராகவன் தீர்மானித்துள்ளார்.

வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும் பால்நிலை சமத்துவம் இல்லாமை தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்கு அதிகளவான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு விசாரணைக் குழுவொன்றினை ஸ்தாபிக்க ஆளுநர் தீர்மானித்துள்ளார்.

மூன்று பேரடங்கிய குறித்த விசாரணைக் குழுவில் இரு பெண்கள் உள்ளடக்கப்படவுள்ளதுடன் அதில் ஒருவர் முறைப்பாட்டாளர்களினால் முன்மொழியப்பட்டவராகவும் இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: