வங்கி சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வங்கிகள் அறிவிப்பு!

Wednesday, June 29th, 2022

வங்கி சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வங்கிகள் அறிவித்தல் விடுத்துள்ளன. அதற்கமைய, இலங்கை வங்கி, மக்கள் வங்கி என்பன காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையும், ஏனைய சில வங்கிகள் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரையும் கொடுக்கல் வாங்கல் வாங்கல் நடவடிக்கைக்காக திறக்கப்பட்டிருக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் அறிவித்துள்ளன.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரையில், வாரத்தில் 3 நாட்களுக்கு மாத்திரம் அஞ்சல் அலுவலக சேவைகள் முன்னெடுக்கப்படும் என அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சேவைகளும் வாரத்தின் இரு நாட்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: