லீசிங் நிலுவைகள் தொடர்பில் விசேட திட்டத்மொன்றை தயாரிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்து!

Wednesday, February 10th, 2021

கொரோனா வைரஸ் காரணமாக செலுத்த முடியாத நிலையிலிருந்த லீசிங் நிலுவைகள் தொடர்பில் முறையான செயற்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள பாடசாலை போக்குவரத்து சேவைகள், அலுவலக போக்குவரத்து சேவை வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் தவணை நிலுவைகளை செலுத்துவதற்கு முறையான திட்டம் ஒன்றை தயாரிக்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்பொழுது நாடு வழமைக்கு நிலைமைக்கு திரும்பியுள்ள நிலையில், வாகன உரிமையாளர்கள் தமது லீசிங் நிலுவைகளை சாதாரண விதத்தில் செலுத்துவதற்கான நிலைமை உருவாகியுள்ளது.

இதனால் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த லீசிங் நிவாரண காலத்தின் நிலுவையையும் சேர்த்து தற்போது வழங்குமாறு லீசிங் நிறுவனங்கள் வாகன உரிமையாளர்களை கோரியுள்ள நிலையில் மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தம்மால் முடியாதென்றும் வாகன உரிமையாளர்கள் நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இலங்கையில் 1.1 மில்லியன் ஊழியர்கள் தொழிலிழக்கும் அபாயம் - ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கத்தின்...
நீக்கப்பட்ட 21 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்க ரணில் விக்ரமசிங்க உள்...
மாகாண சபைத் தேர்தல் - தேவையான சட்டரீதியான திருத்தங்களை துரிதமாக மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற விசேட குழ...