லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் பாதுகாப்பானவை – பொது முகாமையாளர் குலமித்ர பண்டார தெரிவிப்பு!
Saturday, November 27th, 2021எல்பி எரிவாயு சிலிண்டர்களின் கலவை மாற்றத்தால் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதாக கூறும் அறிக்கையை லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நிராகரித்துள்ளது.
அத்தகைய அறிக்கைகளில் எந்த உண்மையும் இல்லை, ஏனெனில் கலவை அதன் நிர்ணயிக்கப்பட்ட அளவில் பராமரிக்கப்படுவதாக அந்நிறுவனத்தின் பொது முகாமையாளரான குலமித்ர பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் LP எரிவாயு சிலிண்டர்களின் கலவை இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் விதிக்கப்பட்ட விவரக்குறிப்பின்படி பராமரிக்கப்படுகிறது, அத்துடன் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் தனித்துவமான தர நிலைகளின்படி பராமரிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை லாஃப்ஸ் கேஸ் வழங்கும் எரிவாயு சிலிண்டர்கள் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் விதிக்கப்பட்ட SLS1178/2013 தரத்தின் கீழ் தயாரிக்கப்படுவதால், ஒவ்வொரு லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரும் பாவனைக்கு பாதுகாப்பானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|