றோலர் மீன்பிடிமுறையை தடை செய்யுமாறு இலங்கை கோரிக்கை!

Saturday, September 17th, 2016

சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் றோலர்  மீன்பிடிமுறையை(roller fishering) தடைசெய்யுமாறு இலங்கை, சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் ஏற்பாடு செய்திருந்தஎமது கடல்என்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

பெரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளில் இருக்கும் மீன்பிடி வலைகள் மூலம் மீன்பிடிப்பதனால் மொத்த மீன்களும் பிடிபடும். ஆனால் இது கடல் வளத்தை அழிக்கும் செயல். எனவே இந்த மீன் பிடி முறையை தடை செய்யுமாறு மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்தை ஏற்றுக் கொண்டார்.

எமது கடலை பாதுகாக்காமல் உலகை பாதுகாக்க முடியாதுஎன அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

roller-fishering

Related posts: