ரஷ்யாவில் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ள இலங்கை சுற்றுலா அபிவிருத்திசபை!

Saturday, March 30th, 2019

இலங்கைக்குள் ரஷ்ய சுற்றுலா பயணிகளை வரவழைப்பதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை ரஷ்யாவில் விசேட வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி இலங்கையின் சுற்றுலா தொடர்பாக தற்போது ரஷ்யாவில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைநகர் மொஸ்கோ மற்றும் சென் பீட்டர்ஸ் நகரங்களில் இதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா பத்தாவது இடத்தில் காணப்படுகிறது.

கடந்த வருடத்தில் 65 ஆயிரம் ரஷ்ய சுற்றுலா பயணிகள் இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: