யாழ் மாவட்ட செயலகத்திற்கு மேலதிக பாதுகாப்பு!

Saturday, April 16th, 2016

யாழ். மாவட்ட செயலர் என்.வேதநாயகத்தினால் விடுக்கப்பட்ட எழுத்துமூலக் கோரிக்கைக்கு அமைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காணி உரிமைகளை பெற்றுத் தருமாறும், இராணுவத்தினரால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துமாறும் வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை சிலர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மாவட்ட செயலகத்திற்குள் அத்துமீறி பிரவேசிக்க முயற்சித்திருந்த வேளை மாவட்ட செயலாளர், பின்கதவால் வெளியேறிய சம்பவமும் பதிவாகியிருந்தது.

இந்த சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் மாவட்ட செயலகத்தில் ஒருசில பொலிஸ் அதிகாரிகளே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும், அதனால் மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும் எனவும் மாவட்ட செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை கவனத்திற்கொண்ட பொலிஸ் தலைமையகம் யாழ். மாவட்ட செயலகத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: