யாழ். மாநகர சபை எல்லைக்குள் அனுமதியற்ற குடிநீர் விற்பனை – சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

Wednesday, September 29th, 2021

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சுத்திகரித்த குடிநீர் விற்பனை செய்யும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நேற்றையதினம் நடைபெற்றது.

இதன்போது, “மாநகர சபை எல்லைக்குள் அனுமதியின்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிலையங்கள் பலஇயங்கி வருகின்றன. அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்று கோரிக்கை சபையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடு திறக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னர் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: