யாழ் மாநகரின் பாதீட்டை நிராகரித்தது ஈ.பி.டி.பி! சபையில் பெரும் அமளிதுமளி!

Friday, December 7th, 2018

முறையான வகையில் நிதி குழுவின் பார்வைக்கு பாதீடு சமர்ப்பிக்காமையினாலும் குறித்த பாதீட்டில் மக்கள் நலன்களை முன்னிறுத்தும் திட்டங்கள் பல புறக்கணிக்கப்டுவதாலும் இந்த பாதீட்டை நாம் நிராகரிக்கின்றோம் என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.இதனால் சபையில் கடும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபையின் 2019 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவு திட்டத்திற்கான விஷேட கூட்டத்தொடர் இன்றையதினம் மாநகரசபையின் சபா மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இதன்போது குறித்த பாதீட்டில் ஒதுக்டகப்பட்ட 206 கடைகளுக்கான வாடகை அறவீடு தொடர்பில் பல சட்ட பிரச்சினைகள் காணப்படுவதாலும் இதற்கு மாகாணசபை மற்றும் ஆளுநர் ஆகியோரது அதிகார      ங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமையால் இதை வரும் ஆண்டில் அந்நிதி ஒதுக்கீட இழக்கப்பட்டுள்ளமையால் இந்த பாதீடு செயலற்றுப் போயுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த பாதீடு ஒரு சோடிக்கப்பட்ட ஒரு கற்பனை. இதிலும் 40 வீத வருமானம் காட்டப்பட்ட கடை வாடகை முற்றாக சபை நிராகரித்துள்ளது. அந்தவகையில் இந்த பாதீட்டின் முன்மொழிவுகளை கொண்டு அடுத்த வருடத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

அந்தவகையில் குறித்த பாதீடு மக்களுக்கானதாக எந்தவகையிலும் அமையாதென்பதுடன் வருமடானத்திற்கு மீறிய செலவுகள் காணப்படுவதாலும் இந்த பாதீட்டை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள மடீயுர்த என்றம் சுட்டி;காட்டிய அவர் இந்த பாதீட்டை முற்றாக நிராகரிக்கின்றது என்றும் அவர் மேருலும் தெரிவித்தார்.

Related posts: