யாழ் மாநகரசபை பெண் அதிகாரி நிதி மோசடி: மூடிமறைக்க மாநகரசபை அதிகாரிகள் முயற்சி!

Wednesday, November 2nd, 2016

யாழ் மாநகர சபையின் திட்டமிடல் பகுதி பெண் அதிகாரி ஒருவர் பல இலட்சம் ரூபா நிதி மோசடி செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் குறித்த விடயத்தை மூடி மறைப்பதற்கு மாநகரசபை உயர் அதிகாரிகள் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது-

யாழ் மாநாகர சபை திட்டமிடல் பகுதியல் அங்கீகரிக்கப்படாத மேலதிக கட்டிட நிர்மாண வேலைகளுக்காக வரி அறவிடும் பெண் அதிகாரி ஒருவர் அதிகாரம் உள்ள பற்றுச்சீட்டு புத்தகம் ஒன்றையும் சட்டவிரோதமான பற்றுச்சீட்டு புத்தகம் ஒன்றையும் பயன்படுத்தி வரி அறவீடு செய்து ஏறத்தாழ 18 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை மேசடி செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நிதி மோசடி விடயத்தை மாநகர சபை உயர் அதிகாரிகள் தெரியவந்துள்ள நிலையில் குறித்த பெண் அதிகாரியை விசாரணைக்கு உட்படுத்த முயன்றபோது குறித்த பெண் அதிகாரி தன்னை விசாரணைக்கு உட்படுத்தினால் தனக்கு குறித்த மோசடியை செய்வதற்கு உடந்தையாக இருந்த ஏனைய அதிகாரிகளையும் வெளிக்கொண்டு வருவேன் என கூறி மிரட்டி வருவதால் குறித்த சம்பவத்தை யாழ் மாநகர சபை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தாது மூடிமறைக்க முற்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

jaffna-municipal2

Related posts: