யாழ். மண்டைதீவில் 46 மில்லியன் ரூபா செலவில் சுற்றுலா மையம் நிர்மாணம்!

யாழ். மண்டைதீவுப் பகுதியில் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் நிதிப்பங்களிப்பில் சுற்றுலா மையமொன்று துரித கதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
உல்லாசப் பயணிகளின் வருகையைத் தூண்டும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் குறித்த சுற்றுலா மையத்தை நிறுவுவதற்கு சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு 46 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளது.
வேலணை பிரதேச செயலகத்தினால் வேலணைப் பிரதேச சபையூடாக இந்தச் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிழைகளை திருத்தி செய்யும்படி தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
கிழக்கின் வறிய மாணவர்களின் கற்றலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளை உதவிக்கரம்!
அத்தியவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல நடவடிக்கை - ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜப...
|
|