யாழ் பொலிஸ் உயரதிகார் அதிரடி – புங்குடுதீவிலிருந்து சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திய கும்பல் ஊர்காற்றுறை பொலிசாரால் பார ஊர்தியுடன் கைது!

Friday, January 14th, 2022

புங்குடுதீவிலிருந்து சட்டவிரோதமாக பனமரக் குற்றிகள் ஏனைய பெறுமதிவாய்ந்த மரங்க் குற்றிகளை ஏற்றிவந்த பாரஊர்தியொன்று ஊர்காவற்றுறை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு மடத்துவெளிப் பிள்ளையார் ஆலயத்திற்கருகாமையில் நேற்று பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜே – 26 கிராம சேவையாளர் மற்றும் அப்பகுதியின் பொருளாதார உத்தியோகத்தர் ஆகியோரது உறுதிப்படுத்தலில் 45 சீவிய பனைமர துண்டுகளை எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அதிகளவான மரங்களை பரவூர்தியில் எடுத்து செல்ல முற்பட்ட வரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மரக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியையும் , மரங்களையும் கையகப்படுத்தியுள்ள பொலிஸார் பாரவூர்தி சாரதியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை பல மாதங்களாக கண்டியை சேர்ந்து ஒருவர் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த அரசியல் செல்வாக்கு கொண்ட இருவரது உதவியுடன் இந்த சட்டவிரோத செயற்பாட்டை மேற்கொள்வதாக ஊர்காவற்றுறை பொலிசாருக்கும் துறைசார் தரப்பினருக்கும் தகவல் தெரிவித்தும் அத்தரப்பினரால் குறித்த தரப்பினருருடன் கொண்டுள்ள நெருக்கம் காரணமாக எதுவித சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்படாதிருந்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் உயரதிகாரியின் தலையீட்டை அடுத்து பனைமரக் குற்றிகளை ஏற்றிய பாரவூர்தி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்

இதேவேளை குறித்த நபர்கள் மரக்கடத்தலில்  ஈடுபடுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவித்த போதிலும், அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், பொலிஸ் உயர் அதிகாரியிடம் முறையிட்ட பின்னரே ஊர்காவற்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதனிடையே இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் குறித்த அரசியல் தரப்பினர் மற்றும் அப்பகுதி இளைஞர்களுடன் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி அது மோதலாக மாறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது

Related posts: